Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.160க்கு விற்பனையாகும் சின்ன வெங்காயம்: பொதுமக்கள் கவலை

ரூ.160க்கு விற்பனையாகும் சின்ன வெங்காயம்: பொதுமக்கள் கவலை

தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதித்துள்ளது. வரத்து குறைவு மற்றும் அதிக தேவை இருப்பதால் விலை அதிகரித்து வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.160-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் கவலையடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. உற்பத்தியாகும் வெங்காயம் அறுவடைக்குப் பிறகு ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அதிக அளவு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 70 முதல் 80 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்நிலையில், தொடர் மழை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைவு போன்ற காரணங்களால் தங்கம் விலை போல தினசரி ஒரு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெங்காயம் 80 முதல் 100 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து ஒரு கிலோ 130 முதல் 160 வரை விற்கப்படுகிறது.

மழை காரணமாக அறுவடை நேரத்தில் விளைச்சல் பாதித்தாலும், சற்று ஆறுதலாக விலை அதிகமாக விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதித்துள்ளது. மேலும், வரத்து குறைவு மற்றும் அதிக தேவை இருப்பதால் விலை அதிகரித்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து அதிகரித்ததால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. இல்லையென்றால் தீபாவளி நேரத்தில் ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய் விற்பனையாக வாய்ப்பு உள்ளது" என்றனர்.

முந்தைய செய்தி
இந்தோஸ்டார் கேப்பிட்டல் கடன் வழங்கல் 51% உயர்வு
அடுத்த செய்தி
ரூ.95,250 கோடி கடன் பெறுகிறது அராம்கோ

தொடர்புடைய செய்திகள்